Wednesday, June 30, 2010

தலிபான்களுடன் போரிட இளவரசர் ஹாரி விருப்பம்.


இளவரசர் சார்லஸ்- டயானா தம்பதியின் இளைய மகன் ஹாரி (25). இவர் இங்கிலாந்து விமானப்படையில் அதிகாரியாக பணி புரிகிறார். மேலும் ஹெலிகாப்டர் ஓட்டும் பைலட் (விமானி) ஆக பயிற்சி பெற்று வருகிறார். வருகிற ஜூலை மாதத்துடன் அப்பயிற்சி முடிய உள்ளது.

ஆப்கானிஸ்தானில் மறைந்து இருக்கும் தலிபான்கள் ஹெலிகாப்டர்கள் மூலம் மேலும் படிக்க....

இமயமலையில் இடம் வாங்கினார் சூப்பர் ஸ்டார்..!


இல்லறம் பாதி, துறவறம் மீதியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார் சூப்பர் ஸ்டார் ரஜினி. வருடத்திற்கொரு முறையாவது இமயமலை பயணம் மேற்கொள்வது அவருக்கு பிடித்த விஷயம் என்று ரஜினியின் ஆன்மீக பெருமைகளை அடுக்கினால், `அதான் தெரியுமே. வேற சொல்லு` என்பார்கள் வாசகர்கள். எனவே ஜம்ப்... மேலும் படிக்க..

Tuesday, June 29, 2010

பிரான்சு வாழ் தமிழீழ மக்களே! ஒன்றுகூடுவோம்


நாம் தோற்று போய்விட்டோமே என்று ஒருபக்கம் நாம் அடங்கிபோய் இருக்க நாம் தோற்று போய்விட்டோமா என்பதே கேள்வி. "நாமொன்றும் தோற்று போகவில்லை சில சண்டை களங்களை இழந்திருக்கிறோம்.

ஆனால் போர் ஒன்றும் முடிந்துவிடவில்லை." பிரான்சு நாட்டின் ராணுவத் தலைவர் ஜூன் மாதம் 18 ஆம் திகதி 1940 ஆம் ஆண்டு பிரான்சு நாடு ஜேர்மனிய நாசி இராணுவத்தின் ஆயுத பலத்தின் முன் தோல்விகண்ட போது இங்கிலாந்தில் தஞ்சம் புகுந்து உலங்கெங்கும் வாழும் பிரெஞ்சு மக்களுக்கும் பிரான்சில் ஜேர்மனிய படை மேலும் படிக்க...


Tuesday, June 15, 2010

அழகான கறுப்பு பெண்ணை தேடும் வசந்தபாலன்.

அங்காடித்தெரு படத்தின் மூலம் புகழின் உச்சி‌க்கே சென்றவர் டைரக்டர் வசந்தபாலன். அங்காடித்தெருவில் மகேஷ் என்ற புதுமுகத்தையும், ஒரேயொரு படத்தில் அறிமுகமான அஞ்சலியையும் நடிக்க வைத்து வெற்றி பெற்ற வசந்தபாலன் அடுத்து இயக்கவுள்ள படத்திலும் பல புதுமுகங்களை அறிமுகப்படுத்தப் போகிறாராம்.

கிராமத்து கதையொன்றின் பின்னணியில் ஆக்ஷனை சேர்ந்து உருவாக்கவிருக்கும் அந்த படத்தில் ஆதி, பசுபதி என இரண்டு ஹீரோக்கள் நடிக்கவுள்ளனர். இதில் ஆதிக்கு ஜோடியாக நடிக்க புதுமுக நடிகை அறிமுகப்படுத்த வசந்தபாலன் திட்டமிட்டிருக்கிறார். இதற்காக புதுமுக

மேலும் படிக்க.........

Thursday, June 10, 2010

“ஸண்டே மட்டும் 3 சிகரெட் பிடிப்பேன்” – நடிகை சேத்னாவின் ஓப்பன் ஸ்டேட்மெண்ட்..!

என்னதான் பேச்சுரிமையும், எழுத்துரிமையும் இருந்தாலும் தமிழ்நாட்டுப் பெண்களுக்கு வெளிப்படையா பேசவே வராது. இதுவும் தமிழ்ப் பெண்கள் தமிழ்ச் சினிமாவில் ஹீரோயின்களாக ஆக முடியாததற்கு ஒரு காரணம்..!

வடக்கில் இருந்து வருபவர்கள் கவர்ச்சி காட்ட விரும்பியும், ஓப்பன் மைண்ட்டோடும் வருவதால் பேச்சுக்கு பேச்சும் கிடைச்சு, படத்துக்கு இலவசமா பிரமோஷனும் கிடைப்பதால்தான் அவர்களையே தயாரிப்பாளர்களும், இயக்குநர்களும் விரும்புகிறார்கள்.

இதோ இப்போது ஒருவர் வந்திருக்கிறார். பெயர் சேத்னா. உத்தர்காண்ட் மாநிலத்தில் இருந்து தமிழுக்கு இறக்குமதி ஆகியிருக்கிறார். தேசிய அளவிலான பேட்மிண்டன் சாம்பியனும்கூட. நீயும் நானும், படத்தின் கதாநாயகி..

படத்தின் ஸ்டில்களிலேயே எதற்கும் துணிந்த ஹீரோயின்தான் என்று தெள்ளத் தெளிவாகத் தெரிந்தது.

“செக்ஸியா நடிக்கிறதுல எனக்கு ஒரு தயக்கமும் இல்லை. அதற்கான அழகும், உடல்வாகும் எனக்கு இருக்கிறதாலதான் எல்லாரும் ரசிக்க விரும்புறாங்க.. ஆனா ஒண்ணு.. சம்பளம் எவ்வளவு

மேலே படிக்க.......

Wednesday, June 9, 2010

மனீஷா கொய்ராலா கல்யாண அறிவிப்பு..!

மாமியார், அம்மா வேடங்கள் வருமளவுக்கு மார்க்கெட் இறங்கிவிட்டதால், திருமணம் செய்து கொள்கிறார் மனீஷா கொய்ராலா.

பம்பாய் படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் மனீஷா கொய்ராலா. கமலுடன் இந்தியன், அர்ஜுன் ஜோடியாக முதல்வன், ரஜினியுடன் பாபா போன்ற படங்களில் நடித்தார். தற்போது தனுசுடன் மாப்பிள்ளை படத்தில் மாமியாராக நடித்து வருகிறார். கூடவே நயன்தாராவுக்கு அம்மாவாக ஒரு மலையாளப் படத்திலும் நடிக்கிறார்.

மனீஷாவுக்கு சொந்த ஊர் நேபாளத்தில் உள்ள காட்மாண்டு. 39 வயதாகும் இவருக்கு திருமணம் நிச்சயமாகியுள்ளது. மணமகன் பெயர் சாம்ராட் டெகால். வருகிற ஜூன் 19-ம் தேதி திருமணத்தை நடத்த முடிவு செய்துள்ளனர்.

காட்மாண்டுவில் உள்ள கோகர்னா காட் பகுதியில் சிவபெருமான் குடி கொண்டிருப்பதாக ஐதீகம். இந்த காட்டுக்குள் அமைந்துள்ள

மேலும் படிக்க........

Tuesday, June 8, 2010

“குஷ்பு உளறிக் கொட்டியிருக்கிறார்” – தாக்குகிறார் நடிகை விந்தியா..!

சமீபத்தில் தி.மு.க.வில் சேர்ந்த நடிகை குஷ்பு கலைஞரின் பிறந்த நாள் விழா கூட்டத்தில் பேசிய பேச்சை விமர்சித்து பேட்டியளித்துள்ளார் இப்போது அ.தி.மு.க.வில் இருக்கும் நடிகை விந்தியா.

விந்தியாவின் பேட்டி இது :

“குஷ்புவும் நானும் சினிமாவில் தோழிகள். அவரும் நானும் இணைந்து சில படங்களில் பணியாற்றியிருக்கிறோம். இதனால் எங்கள் இருவருக்கும் இடையில் சகோதரித்துவ பாசவம் உண்டு. அவர் அரசியலுக்கு வந்ததை நான் மனமகிழ்வுடன் வரவேற்கிறேன்.

ஏதோ கட்சியில் சேர்ந்தோம். முதல் பொதுக்கூட்டத்தில் பேசுகிறோம் என்பதற்காக கட்சித் தலைமையைப் புகழ் பாட

மேலும் படிக்க.........

Saturday, June 5, 2010

பெண்கள் வயதை மறைக்கும் ரகசியம்


ஆண்களிடம் சம்பளத்தைக் கேட்காதே... பெண்களிடம் வயதைக் கேட்காதே` என்பது பொன்மொழி. இரண்டுக்கும் உண்மையான பதில் கிடைப்பது என்பது அரிது.

அதிலும் பெண்கள் பெரும்பாலும், `உங்களின் வயதென்ன?` என்ற கேள்வியை ரசிப்பது கிடையாது. ஒரு பெண்ணிடம் சினேகமாகப் பேசத் தொடங்க விரும்புபவர்கள் இந்தக் கேள்வியைக் கேட்கவே கூடாது.

கிட்டத்தட்ட எல்லாப் பெண்களுமே ஒரு கட்டத்தில் தங்கள் வயதை மறைக்கும் முயற்சியில் இறங்குகிறார்கள். கண்ணுக்குத் தென்படும் ஒன்றிரண்டு நரைமுடிகளை கவலையோடு மறைக்கிறார்கள். அல்லது கணவரின் `டை`யை ரகசியமாகப் பூசுகிறார்கள், முகச்சுருக்கங்களைப் போக்கும் என்று விளம்பரப்படுத்தப்படும் `கிரீம்`களை வாங்கி ஆர்வத்தோடு தடவிக்கொள்கிறார்கள், நடையில், உடையில், பாவனையில் ஒரு டீன் ஏஜ் பெண்ணைப் போலவே காட்டிக்கொள்ள முயல்கிறார்கள்.

ஏன் இந்த அவஸ்தை? பெண்கள் தங்களை வயது குறைந்தவர்களாகக் காட்டிக்கொள்ள மெனக்கெடுவது ஏன்?......
மேலும் படிக்க இங்கே அழுத்தவும்.....

ரம்பாவுக்கு பிறந்த நாள் வாழ்த்து சொன்னால் பரிசு!


உள்ளத்தை அள்ளித்தா படம் மூலம் கதாநாயகியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ரம்பா. இவர் தனது பிறந்த தினத்தை, இன்று (5ம்தேதி) கொண்டாடுகிறார். ரம்பாவுக்கும் கனடா நாட்டை சேர்ந்த தொழில் அதிபர் இந்திரனுக்கும் கடந்த ஏப்ரல் மாதம் திருமணம் நடந்தது. இந்திரனின் மேஜிக்உட் நிறுவனத்தின் விளம்பர தூதராக ஒப்பந்தமான ரம்பாவை பார்த்ததும் இந்திரனுக்கு பிடித்து விட்டது. இதையடுத்து பெற்றோர் சம்மதத்துடன் இந்திரன் - ரம்பா திருமணம் திருப்பதியில் கோலாகலமாக நடந்தது. திருமணம் முடிந்த கையோடு நடிகை ரம்பா கணவருடன் கனடாவுக்கு சென்று விட்டார்.

இப்போது தனது பிறந்த நாளை பெற்றோர், சகோதரர் மற்றும் நண்பர்களுடன் கொண்டாடுவதற்காக சென்னை வந்துள்ளார். எப்போதுமே வித்தியாசத்தை விரும்பும் ரம்பா, பிறந்த நாள் கொண்டாட்டத்தையொட்டி தினமலர் டாட் காமுடன் இணைந்து ஒரு வாழ்த்து போட்டியை அறிவித்திருக்கிறார். பிறந்த நாள் வாழ்த்து சொல்லும் வாசகர்களில் தனக்கு பிடித்தமாக, அழகான வாழ்த்து கூறும் வாசகர்களுக்கு பரிசு வழங்கப் போகிறார். `பிறந்த நாள் வாழ்த்து` போட்டியில் பங்கேற்கும்..........
மேலும் படிக்க இங்கே அழுத்தவும்.....

அழகிய ஒப்பனை


இது அவசர உலகம். இங்கே யாருக்கும், எதையும் நிதானமாக எடுத்துச் செய்வதற்கு போதிய நேரம் கிடைப்பதில்லை. கிடைக்கிற சிறிது நேரத்தை பயன்படுத்தி தங்களை விரைவாக அழகுபடுத்திக்கொண்டு பயணப்படுபவர்கள் அதிகம். இந்த விஷயத்தில் பெண்கள் ரொம்ப சுறுசுறுப்பு.

இன்று பெண்கள் எல்லாத் துறைகளிலும் வென்று வருகிறார்கள். எனவே அதற்கேற்றாற் போல் நடை, உடை, பாவனையை மாற்றிக் கொள்வது மிக முக்கியம். பணி புரிவோர் அந்தந்த துறைக்கும் அவர்கள் வகிக்கும் பதவிக்கும் தகுந்தாற் போல் கூந்தலை வெட்டிக் கொள்வது அவசியம். வேலைக்கு சவுகரி யமான `ஹேர்கட்` சமூகத்தில் அவர்களை மிடுக்காகவும், மரியாதையாகவும் காட்டும்.`` என்கிறார், அழகுக் கலை நிபுணர்

`அழகுக்கலை குடும்பத்திற்கு கூடுதல் வருமானத்தை பெருக்க உதவியாக உள்ளது. வாழ்க்கை தரத்தையும் உயர்த்திக் கொள்வதற்கு உதவுவதால் பெண்களுக்கு சமுதாயத்தில் ஒரு நல்ல அந்தஸ்தை ஏற்படுத்திக் கொடுக்கிறது. மேலும், பெண்கள் சிறந்த தொழில் முனைவோர்களாக உருவாகுவதற்கு வாய்ப்பு உள்ளது. இந்த தொழிலில் பெண்களால் அதிக வருமானமும் ஈட்ட முடியும்.``

``கல்லூரி மாணவிகளுக்கு இப்போது `ஸ்ட்ரைட்டனிங்` மீது மோகம் அதிகரித்துள்ளது. பொதுவாக, தெரபி வகைகளை ஆயுர்வேத தெரபி, பாடி தெரபி, பேசியல் தெரபி என்று கூறுவார்கள். அந்த வகையில் கூந்தலுக்கு செய்யும் தெரபியை......
மேலும் படிக்க இங்கே அழுத்தவும்.....

Friday, June 4, 2010

முகம் பளபளப்பாக தேன்டோன‌ர்(Toner )

வெள்ளரிக்காய் ஜூஸ் 2டீஸ்பூன்
தேன் 1 டீஸ்பூன்
இரண்டையும் நன்றாக மிக்ஸ் செய்து முகத்தில் தடவி 15நிமிடம் ஊறவைத்து கழுவவும்.இப்படி வாரம் இரண்டு முறை செய்து வந்தால் முகத்தில் இருக்கும் போர்ஸ்(pores ) எல்லாம் போய் முகம் நல்ல மெதுவாக (soft) இருக்கும்

ஸ்கரப்
ஒட்ஸ்( oats)2 டீஸ்பூன்
தேன் 2 டீஸ்பூன்
பாதாம் பவுடர் 1 டிஸ்பூன்
தயிர் 2 டிஸ்பூன்
நான்கையும் நன்றாக மிக்ஸ் செய்து முகத்தில் தடவி 10 நிமடத்திற்கு சர்குலர் மோஷனில் தேய்க்கவும் .பிறகு 10 நிமிடம் ஊறவைத்து கழுவவும்.இப்படி இரண்டு வாரம் ஒரு முறை செய்து வந்தால் முகத்தில் இருக்கும் தேவை இல்லாத டெட் ஸ்கின் எல்லாம் போய் முகம் பளபளப்பாக இருக்கும்......
மேலும் படிக்க இங்கு அழுத்தவும்......

காதல் ஜோடியை தேர்ந்தெடுப்பதில் கவனமாக இருங்கள்நீங்கள் மணமாகாத இளம் பெண் என்றால் உங்களை பல இளைஞர்கள் காதலிக்க கூடும். காதல் என்பது திருமணம் என்ற புனிதமான ஒரு நிலையை நோக்கி உங்களை கொண்டு செலுத்தும் ஒரு சக்தி, அதனால் காதல் விஷயத்தில் எச்சரிக்கை மனப்பான்மை வேண்டும்.

உங்களை காதலிப்பதாகக் கூறும் இளைஞன் உங்கள் அழகை மட்டுமே வர்ணிப்பவனாக இருந்தால் அவனை நம்பாதீர்கள். ஏனென்றால் உங்கள் அழகு எந்தச் சமயத்திலும் பின்னாளில் குறையக்கூடும். திருமணமான பிறகு அழகு குறைந்தபோது உங்களிடம் கவர்ச்சியை எதிர்பார்த்த இளைஞன் ஏமாற்றமுற்று தடம் மாறக்கூடும்.......................
மேலும் படிக்க இங்கே அழுத்தவும்.....

நேர்மை தான் குடும்பத்தின் முதுகெலும்பு.

நம்பிக்கை கணவன்-மனைவி இருவரும் ஒருவரையொருவர் நன்றாக புரிந்து கொள்ள வேண்டும். ஒருவரை மற்றவர் முழுமையாக நம்ப வேண்டும். தங்களுக்கென்று தனிபட்ட திறமை உள்ளது என்பதை உணர வேண்டும். அதை செயல்படுத்திக் காட்டும் வாய்ப்பினை ஒருவருக்கொருவர் உருவாக்கிக் கொடுக்க வேண்டும்.

வருங்காலத்தில் என்னவெல்லாம் நடக்க போகிறதோ என்று பயம் கொள்வதை விட, நிகழ்கால வாழ்க்கையை வெற்றி கரமாக நடத்திக் காட்டுவது தான் புத்திசாலித்தனம். முதுமை என்பது எல்லோருக்கும் வருவது தான். அதற்காக நாற்பது வயதை நாம் தாண்டி விட்டோம். உடல் சோர்வு தெரிகிறது. 50 வயதிற்கு பின் முட்டுவலி தெரிகிறது. 60 வயதிற்கு பின் தோல் சுருங்கி போய்விடுமே என்றெல்லாம் பயந்து கொண்டிருக்கக் கூடாது.

எந்த வயதிலும் மனதை இளமையாக வைத்துக் கொள்ள முடியும் என்று சந்தோஷபடுங்கள். பாதுகாப்பு ஆண்களை விட பெண்களுக்குத் தான் அதிக பாதுகாப்பு தேவைபடுகிறது. திருமண வயதையடையும் வரை பெண்களுக்கு பெற்றோரால் பாதுகாப்பு தரப்படுகிறது. பெண்கள் தங்கள் தாயைக் காட்டிலும் தந்தையே அதிக பாதுகாப்பு தருவதாக எண்ணுகின்றனர். திருமணத்திற்கு பின் பாதுகாப்பிற்காக கணவனை நம்பி........
மேலும்.....

தமிழின உணர்வின் அடையாளம்; SIFCCக்கு ஆதரவை தெரிவியுங்கள்
நமது SIFCC (South Indian Film Chamber of Commerce) இலங்கையின் தமிழின அழிப்பின் கொண்டாட்டமாக நடக்கும் IIFA விருதுவழங்கும் நிகழ்வை புறக்கணித்ததோடு மட்டும் இல்லாமல் அந்த விழாவில் கலந்து கொள்ளும் பாலிவுட் திரைநட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் படங்களுக்கு தென்னிந்தியாவில் தடை விதித்துள்ளது.

இது தென்னிந்திய திரை உலகத்தினரின் மிகச்சிறந்தமனிதாபிமானத்தின் வெளிப்பாடு ஆகும். அவர்களை இந்த முடிவில் இருந்து பின்வாங்க செய்ய பல்வேறு மட்டத்தில் இருந்தும் அழுத்தங்கள் வரும்.

ஆகையால் உடனே நம் அனைவரும் SIFCC க்கு நம் ஆதரவை தெரிவித்து அவர்களின் இந்த நிலைபாட்டை வலுப்படுத்துவோம். SIFCC க்கு தந்திகள் வழியாகவும் மின்னஞ்சல் வழியாகவும் தமிழர்கள் தங்களின் பாராட்டுதல்களையும்ஆதரவையும் தெரிவிக்குமாறு கேட்டு கொள்கிறோம்.

South India Film Chamber Of Commerce Association

Phone: Home (044) 28291507

Address: 604-606,

TR Sundaram Avenue, Anna Salai,

Chennai- 600006,

Tamil Nadu

Landmark: Near Rani Seeta Hall

Email: sifcc_08@bsnl.in
மேலும்.....

Thursday, June 3, 2010

பிரச்சனைகளைக் கண்டு சோர்வடையாதீர்கள்


பிரச்னைகள் இல்லாத மனிதனே கிடையாது. வாழ்க்கையில் நமக்கு ஏற்படும் பிரச்னைகள் கூட ஒரு அனுபவம் தான். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான பிரச்னைகள் இருக்கும். அதுபோலவே, ஒவ்வொரு பிரச்னைக்கும் ஒவ்வொரு விதமான தீர்வு இருக்கும்.எனவே, பிரச்னைகளைக் கண்டு பயந்துவிடாமல் அவற்றை தைரியமாக எதிர்கொள்ள வேண்டும். அதற் கான சில டிப்ஸ் இதோ உங்களுக்காக

* நமக்கு ஏற்பட்டுள்ள இந்த பிரச்னைக்கு வேறு யாரும் காரணமில்லை. அதை நாம் தான் வரவழைத்துக் கொண்டோம். எனவே, இந்த பிரச்னையை தீர்க்க நம்மால் மட்டும் தான் முடியும் என்று நம்பிக் கையுடனும் மனவலிமையுடனும் அவற்றை எதிர்கொள்ளுங்கள்.

* எந்த பிரச்னையையும் பெரிதுபடுத்திப் பார்க்கும் பூதக்கண்ணாடி மனநிலைமையை கைவிடுங்கள். எதையும்....
மேலும்.....

ஹேர் கலரிங் செய்து கொள்ளப் போகிறீர்களா?
"ஹேர் கலரிங்" என்பது, பேஷன் உலகில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஒரு விஷயமாக இன்று உருவாகி விட்டது. சிலர், தங்கள் கூந்தலுக்கு அழகு சேர்ப்பதற்காகவும், சிலர் தங்களின் நரை முடிகளை மறைப்பதற்காகவும் ஹேர் கலரிங் செய்கின்றனர். ஒருவரின் தோற்றத்தை வேகமாக மாற்றுவதற்கான சிறந்த வழி ஹேர் கலரிங். தற்போது ஹேர் கலரிங், பலதரப்பட்ட கூந்தல் தன்மைகளுக்கு ஏற்ப, பல்வேறு வண்ணங்கள் மற்றும் தரங்களில் கிடைக்கின்றன.
"ஹேர் கலரிங்` வகைகள்:
ஹேர் கலரிங் செய்வதற்காக பயன்படுத்தப்படும் வண்ணங்கள், திரவம், பவுடர், ஆயில் கிரீம்கள் மற்றும் ஜெல்கள் உட்பட பல வகைகளில் கிடைக்கிறது. நிரந்தர ஹேர் கலரிங் செய்வதற்காக ஜெல் மற்றும் பிற பொருட்கள் ஆகியவையும், தற்காலிக மற்றும் குறிப்பிட்ட காலம் நிரந்தரமாக இருக்கும் செமி-பெர்மனன்ட் கலரிங் செய்வதற்காக, மஸ்காரா, கிரேயான்ஸ் மற்றும் வண்ண கூந்தல் ஸ்பிரேக்கள் ஆகியவை பயன்படுத்தப்படுகின்றன.
கூந்தலின் நீளத்தை பொறுத்து, அதற்கு ஹேர் கலரிங் செய்வதற்கான செலவும் ஏற்படும். குட்டையான மற்றும் நடுத்தர அளவிலான கூந்தல் வகைகளுக்கு,.......
மேலும் படிக்க.....

கட்டுப்பாடற்ற சுதந்திரம் கூடாது


* பெண்கள் ஆண்களைப் போல் படிக்கலாம். திறமைக்கேற்ப சம்பாதிக்கலாம்.ஆனால், பெண்களுக்கு கட்டுப்பாடற்ற சுதந்திரம் கிடைப்பது நல்லதல்ல. அது அவர்களுக்கு கெடுதலையே உண்டாக்கும்.


* சமுதாயத்தில் பொதுவாழ்வில் பெண்கள் ஈடுபடும்போது ஆத்ம தர்மம் என்ற குறிக்கோளை மறக்கக்கூடாது. படிப்பு என்பது விவேகத்தையும், நன்மைகளை பகுத்தறியும் அறிவையும் கொடுப்பதாக அமைய வேண்டும். பழங்காலத்தில் நன்குபடித்த பெண்கள் இருந்திருக்கின்றனர். அப்பெண்களைப் போல, தற்கால பெண்களும் தமக்குரிய தர்மநெறிமுறைகளை மீறாமல் ஒழுக்கத்தைக் கண்ணாகப் போற்றிப் பாதுகாக்க வேண்டும்......
மேலும் படிக்க.....

இளமையிலேயே முதுமையா?


இளம் வயதிலேயே சில பெண்களுக்கு முகத்தில் சுருக்கம் விழுவதைக் காணக்கூடியதாக உள்ளது

இதற்குக் காரணம் "பாஸ்ட் புட்’ உணவு வகைகளை இவர்கள் அதிகம் உண்பதுதான் எனக் கூறப்படுகின்றது. இது கட்டாயமாகத் தவிர்க்கப்பட வேண்டியது அவசியம்.

இளமையிலேயே வயதானவர் போல் தோற்றமளித்தால் யாருக்குத்தான் கவலை வராது? உணவு விடயத்தில் சிறிது கவனம் செலுத்தினால் இவர்களது கவலை மறைந்தே போவது உறுதி.

இதோ சில குறிப்புகள் உங்களுக்கு:

காய்கறி பழ வகைகளைத் தவறாமல் சாப்பிடுங்கள். இயற்கையான காய்கறி, பழ வகைகளில் உள்ள விற்றமின் மற்றும் சத்துக்கள் தோலில் சுருக்கம் ஏற்படுவதைத் தவிர்க்கக் கூடியவை............
மேலும் படிக்க இங்கு அழுத்தவும்....

மென்மையான சருமத்திற்கு உணவே முக்கியம்


மிளிரும், மென்மையான, புத்துணர்ச்சியான மற்றும் மிருதுவான என, பல்வேறு வகையான சருமங்கள் இருக்கின்றன. இத்தகைய சருமங்களை பெறுவதற்காக, ஏராளமான அழகு சாதனப் பொருட்களும் விளம்பரப்படுத்தப்படுகின்றன. ஆனால், நாம் சாப்பிடும் உணவின் மூலமே, சருமத்தை அழகாகவும், ஒளிரும் தன்மை உடையதாகவும் வைத்துக் கொள்ள முடியும்.

பொதுவாகவே, சரும ஆரோக்கியத்துக்கு வைட்டமின் ஏ, பி, சி, இ, ஆன்டி ஆக்சிடன்ட்கள், சிங்க் மற்றும் செலேனியம் ஆகியவை மிகவும் அவசியம். அதிகளவு தண்ணீர் குடிப்பது மற்றும் தோலுக்கு ஈரப்பதத்தை வழங்கும் அத்தியாவசிய கொழுப்பு நிறைந்த உணவுகளை சாப்பிடுவதும் முக்கியமானது.

பருப்பு வகைகள், எண்ணெய் சத்துக்கள் நிறைந்த......
மேலும் படிக்க.....

Wednesday, June 2, 2010

உணர்வுகள் கொந்தளிக்கும்போது...
நமக்குள் ஏற்படும் உணர்ச்சிக்கொந்தளிப்புகள் உடலைப் பாதிக்கின்றன என்பது மருத்துவரீதியாக நிரூபிக்கப்பட்ட உண்மை. மனிதர்களுக்கு அதிகமாக மனநெருக்கடி, அழுத்தத்தை ஏற்படுத்தும் எட்டு விஷயங்களை ஆராய்ச்சியாளர்கள் டாக்டர் தாமஸ் ஹோம்ஸும், டாக்டர் ரிச்சர்ட் ரகேயும் பட்டியலிட்டுள்ளனர்:
அவை, நெருங்கிய குடும்ப உறுப்பினரின் மரணம், வாழ்க்கைத் துணையின் மரணம், உடல்நலக் குறைவு, காயம், திருமணம், விவாகரத்து, பிரிவு, வேலையிழப்பு மற்றும் சிறைத் தண்டனை.

மனம், உணர்ச்சிக் கடலில் தக்கையாய் தந்தளிக்கும்போது ரத்தத்தில் `ஹார்மோன்களும்`, `நிïரோ டிரான்ஸ்மீட்டர்களும்` விடுவிக்கப்படு கின்றன. ரத்தத்தில் விடுவிக்கப்படும் மூன்று முக்கியமான விஷயங்கள் கார்ட்டிஸோல், அட்ரினலின், நார்அட்ரினலின் ஆகியவை ஆகும். கார்ட்டிஸோல், ரத்தத்தில் கொழுப்பு மற்றும் சர்க்கரையை விடுவித்து, நோய் எதிர்ப்பு அமைப்பு முறையாக செயல்படுவதைத் தடுக்கிறது....
மேலும் படிக்க.....

ஆரோக்கியமான வாழ்க்கை உங்களுக்கே!

ஆனந்தம். உடல் ஆரோக்கியம் இல்லாது எந்தப் புறவசதிகள் இருந்தாலும் சந்தோஷத்தை அனுபவிக்க முடியாது. ஆரோக்கியம் காக்க வேண்டும் என்றதுமே உங்களுக்குக் கடுமையான பயிற்சிகள், முயற்சிகள்தான் ஞாபகத்துக்கு வரும். ஆனால் சில எளிய பயிற்சிகள், சில எளிய முயற்சிகள் போதும். இதோ... அந்த வழிகள்...

ஒன்றியிருங்கள்

ஒவ்வொரு கணமும் நாம் அந்தக் கணத்தோடு ஒன்றியிருக்க வேண்டும். உதாரணத்துக்கு, சாப்பிடுகிறீர்கள் என்றால் அதன் சுவை, அது சமைக்கப்பட்டிருக்கும் விதத்திலேயே மூழ்கிப் போங்கள். அதேபோல ஒவ்வொருமுறை நீங்கள் அமரும்போதும் சரியாக அமர்ந்திருக்கிறோமா என்று யோசித்துச் சரிப்படுத்திக்கொள்ளுங்கள். படிப்படியாக இந்த ஒழுங்குகள் உங்களின் மற்ற செயல்பாடுகளிலும் வந்துவிடும்.
மேலும் படிக்க.....

மென்மையான சருமம் வேணுமா?

பெரும்பாலானோர், தங்கள் சருமம் எந்த வகையை சேர்ந்தது என்பது பற்றி தெரியாமலே உள்ளனர்.
வறண்ட சருமம், எண்ணெய் பசை சருமம் மற்றும் மிக மென்மையான சருமம் என, சருமம் மூன்று வகைப்படும். இதில், மிக மென்மையான சரும வகையை சேர்ந்தவர்கள், அழகு சாதனப் பொருட்கள் மற்றும் சருமத்திற்கான பிற பொருட்களை பயன்படுத்தும் போது மிக கவனமாக இருக்க வேண்டும்.
மென்மையான சருமத்தை கண்டறிவது:
* சருமம் எளிதில் சிகப்பாக மாறுதல்.
* மாய்ச்சரைசர்கள் உட்பட அனைத்து பொருட்களுக்கும் சருமத்தில் எதிர் விளைவுகள் உண்டாதல்.
* சூரிய வெப்பத்தால், எளிதில் பாதிப்பிற்கு ஆளாதல்.
* வெப்பம் மற்றும் குளிர் ஆகிய இரண்டினாலும் விரைவாக பாதிக்கப்படுதல்.
மேற்கூறிய இந்த அறிகுறிகள் தென்பட்டால், அவை மிக மென்மையான சருமத்தினரை குறிக்கிறது.

மென்மையான சருமத்திற்கான பிரத்யேக கவனிப்புகள்....
மேலும் படிக்க....

இளமை தரும் ஆரஞ்சு பழச்சாறு


என்றும் இளமையுடன் வாழ எவருக்குத்தான் ஆசை இருக்காது. தற்போது 20 வயது இளைஞன் கூட நாற்பது வயது அடைந்தவன் போல் காட்சி அளிக்கிறார்கள். தலைமுடி நரைக்கிறது. தோலில் சுருக்கம் ஏற்படுகிறது. கண்கள் குழிவிழுந்து காணப்படுகின்றன. நல்ல திடகாத்திரமான இளைஞர்களை இன்று காணமுடியவில்லை. இதற்குக் காரணம் இராசயனம் கலந்த உணவுகள், அரைவேக்காட்டு உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள், குளிரூட்டப்பட்ட உணவுகள், சத்தற்ற உணவுகள், உடலுக்குத்தேவையான உடற்பயிற்சி இல்லாமை போன்றவையே.

இன்றைய மாணவ சமுதாயத்திற்கு கல்விச் சாலைகள் சிறைச்சாலைகளாக உள்ளன. பாடத்திட்டம் அனைத்தும் மூளை சம்பந்தப்பட்டதாக இருக்கிறது. உடலுக்குத் தேவையான உடற்பயிற்சி, விளையாட்டு என்பதே இல்லை. மேலும் வீட்டிற்கு வரும் குழந்தைகளை கட்டாயப்படுத்தி சிறப்பு வகுப்புக்கு அனுப்புகிறார்கள். இதுபோல்.....

மேலும் படிக்க....

Tuesday, June 1, 2010

உடல் எடையை அதிரடியாகக் குறைத்தால் சருமத்தில் சுருக்கம் ஏற்படும் ஆபத்துகுண்டாக இருக்கும் பெரும்பாலான பெண்கள் ஒல்லியாக மாற தேர்தெடுக்கும் வழி முறை பட்டினி. தொடர்ந்து பட்டினி கிடக்கும்போது சருமத்தில் சுருக்கம் ஏற்பட்டு விடுகிறது. அந்த சுருக்கத்தைப் போக்க பின்பு, அழகு சிகிச்சையும் எடுத்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகிறார்கள். உடல் எடையைக் குறைக்க பட்டினி கிடப்பதைவிட சிறந்தது தேவையான உடற்பயிற்சியும், உணவுக்கட்டுப்பாடும். இவைகளை தொடர்ந்து இளம்பெண்கள் கடைபிடித்தால் உடல் எடை கொஞ்சம் கொஞ்சமாக குறையும். சருமத்தில் சுருக்கம் ஏற்படாது. கவர்ச்சியான அழகையும்......மேலும் படிக்க....

பாப் இளவரசி பிரிட்னி ஸ்பியர்ஸ் டிவிட்டர் ராணியாக முடிசூடிக்கொண்டிருக்கிறார்.

பாப் இளவரசி பிரிட்னி ஸ்பியர்ஸ் டிவிட்டர் ராணியாக முடிசூடிக்கொண்டிருக்கிறார்.ஆம் குறும்பதிவு சேவையான டிவிட்டரில் அதிக பின்தொடர்பாளரை கொண்டவர்கள் பட்டியலில் பிரிட்னி முதல் இடம் பிடித்திருக்கிறார்.அதோடு டிவிட்டரில் 5 மில்லியன் பின்தொடர்பாளர்களை பெற்றுள்ள முதல் நபர் என்னும் பெருமையையும் அவருக்கு கிடைத்துள்ள‌து.

டிவிட்டர் சேவையை அறிந்தவர்கள் அதன் பின்தொடரும் வசதியையும் அறிந்திருப்பார்கள்.டிவிட்டரில் பின்தொடர்வது என்பது குறிப்பிட்ட டிவிட்டர் கணக்கிற்கான சந்தாதாராராக சேர சம்மதிப்பதாக அர்த்தம்.அதன் பிறகு யாருடைய டிவிட்டர் கணக்கை பின்தொடருகிறோமோ அவர்களின் டிவிட்டர் பதிவுகள் நம்முடைய டிவிட்டர் பக்கத்தில் தொடர்ந்து இடம்பெறும்.டிவிட்ட‌ர் ப‌திவுக‌ளை ப‌டிக்க‌ இதுவே சுல‌ப‌மான‌ வ‌ழியாக‌ க‌ருதப்ப‌டுகிற‌து.

தின‌மும் ஒவ்வொரு டிவிட்ட‌ர் முக‌வ‌ரியாக‌ டைப் செய்து ப‌டிப்ப‌த‌ற்கு ப‌திலாக‌ யாருடைய‌ டிவிட்ட‌ர் ப‌திவுக‌ளை ப‌டிக்க‌ விருப்ப‌ம் உள்ள‌தோ அவ‌ர்களீன் பின்தொட‌ர்பாள‌ராக‌ மாறிவிட்டால் போதும் புதிய‌ டிவிட்ட‌ர் செய்திக‌ளை அவ‌ர்க‌ள் வெளியிடும் போதெல்லாம் ந‌ம்முடைய‌ டிவிட்ட‌ர் ப‌க்க‌த்திலேயே பார்த்துக்கொள்ள‌லாம்.
மேலும் படிக்க........

உங்கள் சிரிப்பு, “பெர்சனாலிட்டியை உயர்த்துவதோடு, உங்களை வசீகரமாகவும் காட்டும்.

இந்த உலகில் நம்மை சட்டென்று கவர்பவர்கள் யார் என்றால் நிச்சயமாக, சிரித்த முகத்துடன் இருப்பவர்கள் தான். புன்னகை அவ்வளவு சக்தி வாய்ந்தது. அதனால் தானோ என்னவோ, நம் முன்னோர் “புன்னகை இருக்க, பொன் நகை எதற்கு? என்ற பழமொழியை கூறியுள்ளனர். புன்னகை மூலம், எதிரிகளைக் கூட நண்பராக்கிக் கொள்ளலாம்.

ஒருவரின் தோற்றத்தை, செலவே இல்லாமல் வசீகரமாக மாற்றக் கூடியது அவரது புன்னகையே. நமக்குப் பிடித்த நபர்களைப் பார்த்தவுடன், நம்மையும் அறியாமல் நாம் புன்புறுவல் பூக்கிறோம் அல்லவா?அந்த சிரிப்பு, வெறும் உதடுகளின் அசைவு மட்டும் இல்லை; அது உறவின் வெளிப்பாடு. சிரித்த முகத்தை பார்க்கும் போது, எத்தனையோ பிரச்னைகளை மீறி, ஒரு நம்பிக்கை விதை மனதில் விழுகிறது.

உங்கள் சிரிப்பு, “பெர்சனாலிட்டியை உயர்த்துவதோடு, உங்களை வசீகரமாகவும் காட்டும். எனவே, சிரித்த முகத்துடன் இருக்க பழகுங்கள். அழும் குழந்தையை விட, சிரிக்கும் குழந்தையை தானே நாம் அனைவரும் விரும்புகிறோம். சிடுமூஞ்சி பெண்ணை விட, சிரித்த முகம் கொண்ட பெண் தானே விளம்பரங்களுக்கு ஏற்றவள். ஆக, சிரித்த முகமே கூடுதல் வசீகரம். பிறரை வசீகரப்படுத்தவும், எப்படிபட்ட நபரையும் “ஹேண்டில் செய்வதற்கும், அவசியமான ஒன்று உங்கள் புன்னகை என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

மேலும் படிக்க...