Tuesday, June 1, 2010

பாப் இளவரசி பிரிட்னி ஸ்பியர்ஸ் டிவிட்டர் ராணியாக முடிசூடிக்கொண்டிருக்கிறார்.

பாப் இளவரசி பிரிட்னி ஸ்பியர்ஸ் டிவிட்டர் ராணியாக முடிசூடிக்கொண்டிருக்கிறார்.ஆம் குறும்பதிவு சேவையான டிவிட்டரில் அதிக பின்தொடர்பாளரை கொண்டவர்கள் பட்டியலில் பிரிட்னி முதல் இடம் பிடித்திருக்கிறார்.அதோடு டிவிட்டரில் 5 மில்லியன் பின்தொடர்பாளர்களை பெற்றுள்ள முதல் நபர் என்னும் பெருமையையும் அவருக்கு கிடைத்துள்ள‌து.

டிவிட்டர் சேவையை அறிந்தவர்கள் அதன் பின்தொடரும் வசதியையும் அறிந்திருப்பார்கள்.டிவிட்டரில் பின்தொடர்வது என்பது குறிப்பிட்ட டிவிட்டர் கணக்கிற்கான சந்தாதாராராக சேர சம்மதிப்பதாக அர்த்தம்.அதன் பிறகு யாருடைய டிவிட்டர் கணக்கை பின்தொடருகிறோமோ அவர்களின் டிவிட்டர் பதிவுகள் நம்முடைய டிவிட்டர் பக்கத்தில் தொடர்ந்து இடம்பெறும்.டிவிட்ட‌ர் ப‌திவுக‌ளை ப‌டிக்க‌ இதுவே சுல‌ப‌மான‌ வ‌ழியாக‌ க‌ருதப்ப‌டுகிற‌து.

தின‌மும் ஒவ்வொரு டிவிட்ட‌ர் முக‌வ‌ரியாக‌ டைப் செய்து ப‌டிப்ப‌த‌ற்கு ப‌திலாக‌ யாருடைய‌ டிவிட்ட‌ர் ப‌திவுக‌ளை ப‌டிக்க‌ விருப்ப‌ம் உள்ள‌தோ அவ‌ர்களீன் பின்தொட‌ர்பாள‌ராக‌ மாறிவிட்டால் போதும் புதிய‌ டிவிட்ட‌ர் செய்திக‌ளை அவ‌ர்க‌ள் வெளியிடும் போதெல்லாம் ந‌ம்முடைய‌ டிவிட்ட‌ர் ப‌க்க‌த்திலேயே பார்த்துக்கொள்ள‌லாம்.
மேலும் படிக்க........

No comments:

Post a Comment