
ஆண்களிடம் சம்பளத்தைக் கேட்காதே... பெண்களிடம் வயதைக் கேட்காதே` என்பது பொன்மொழி. இரண்டுக்கும் உண்மையான பதில் கிடைப்பது என்பது அரிது.
அதிலும் பெண்கள் பெரும்பாலும், `உங்களின் வயதென்ன?` என்ற கேள்வியை ரசிப்பது கிடையாது. ஒரு பெண்ணிடம் சினேகமாகப் பேசத் தொடங்க விரும்புபவர்கள் இந்தக் கேள்வியைக் கேட்கவே கூடாது.
கிட்டத்தட்ட எல்லாப் பெண்களுமே ஒரு கட்டத்தில் தங்கள் வயதை மறைக்கும் முயற்சியில் இறங்குகிறார்கள். கண்ணுக்குத் தென்படும் ஒன்றிரண்டு நரைமுடிகளை கவலையோடு மறைக்கிறார்கள். அல்லது கணவரின் `டை`யை ரகசியமாகப் பூசுகிறார்கள், முகச்சுருக்கங்களைப் போக்கும் என்று விளம்பரப்படுத்தப்படும் `கிரீம்`களை வாங்கி ஆர்வத்தோடு தடவிக்கொள்கிறார்கள், நடையில், உடையில், பாவனையில் ஒரு டீன் ஏஜ் பெண்ணைப் போலவே காட்டிக்கொள்ள முயல்கிறார்கள்.
ஏன் இந்த அவஸ்தை? பெண்கள் தங்களை வயது குறைந்தவர்களாகக் காட்டிக்கொள்ள மெனக்கெடுவது ஏன்?......
மேலும் படிக்க இங்கே அழுத்தவும்.....



ramyakrishan alakaka irukirar
ReplyDelete