Tuesday, June 1, 2010

உங்கள் சிரிப்பு, “பெர்சனாலிட்டியை உயர்த்துவதோடு, உங்களை வசீகரமாகவும் காட்டும்.

இந்த உலகில் நம்மை சட்டென்று கவர்பவர்கள் யார் என்றால் நிச்சயமாக, சிரித்த முகத்துடன் இருப்பவர்கள் தான். புன்னகை அவ்வளவு சக்தி வாய்ந்தது. அதனால் தானோ என்னவோ, நம் முன்னோர் “புன்னகை இருக்க, பொன் நகை எதற்கு? என்ற பழமொழியை கூறியுள்ளனர். புன்னகை மூலம், எதிரிகளைக் கூட நண்பராக்கிக் கொள்ளலாம்.

ஒருவரின் தோற்றத்தை, செலவே இல்லாமல் வசீகரமாக மாற்றக் கூடியது அவரது புன்னகையே. நமக்குப் பிடித்த நபர்களைப் பார்த்தவுடன், நம்மையும் அறியாமல் நாம் புன்புறுவல் பூக்கிறோம் அல்லவா?அந்த சிரிப்பு, வெறும் உதடுகளின் அசைவு மட்டும் இல்லை; அது உறவின் வெளிப்பாடு. சிரித்த முகத்தை பார்க்கும் போது, எத்தனையோ பிரச்னைகளை மீறி, ஒரு நம்பிக்கை விதை மனதில் விழுகிறது.

உங்கள் சிரிப்பு, “பெர்சனாலிட்டியை உயர்த்துவதோடு, உங்களை வசீகரமாகவும் காட்டும். எனவே, சிரித்த முகத்துடன் இருக்க பழகுங்கள். அழும் குழந்தையை விட, சிரிக்கும் குழந்தையை தானே நாம் அனைவரும் விரும்புகிறோம். சிடுமூஞ்சி பெண்ணை விட, சிரித்த முகம் கொண்ட பெண் தானே விளம்பரங்களுக்கு ஏற்றவள். ஆக, சிரித்த முகமே கூடுதல் வசீகரம். பிறரை வசீகரப்படுத்தவும், எப்படிபட்ட நபரையும் “ஹேண்டில் செய்வதற்கும், அவசியமான ஒன்று உங்கள் புன்னகை என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

மேலும் படிக்க...

1 comment: